அடுத்த மாதம் முதல் தமிழ்நாட்டில் உயரும் மின் கட்டணம் - அதிர்ச்சியில் மக்கள்..!
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டாடும் மக்கள்
மின் வாரியத்தின் நதி நெருக்கடியை சமாளிப்பதற்காக மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி, கடந்த ஆண்டு ஜுலை மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் விண்ணப்பித்த நிலையில் அதற்கு மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது.
இதையடுத்து தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கான மின் கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் உயர்த்தப்பட்டது.
புதிய மின் கட்டணத்தின் படி, வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் 12 சதவீதம் மூதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால், மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
மீண்டும் உயரும் மின் கட்டணம்
உயர்த்தப்பட்ட கட்டணங்களையே மக்கள் கட்ட முடியாமல் தவித்து வரும் நிலையில், மீண்டும் மின் கட்டணம் உயர்த்த மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் தகவல் மக்கள் மத்தியில் வயிற்றில் புளியை கரைக்கிறது.
கடந்த ஆண்டு ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவில், வரும் 2026- 2027 ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் ஜுலை 1 ஆம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதன் படி, கடந்த ஏப்ரல் மாத்தித்தின் பணவீக்க அளவின் அடிப்படையில் மின் கட்டணத்தை 4 புள்ளி 70 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.