தமிழ்நாட்டில் மீண்டும் உயரும் மின்கட்டணம்? - அமைச்சர் விளக்கம்
தமிழ்நாட்டில் மீண்டும் மின்கட்டணம் உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின் கட்டண உயர்வு
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் தமிழ்நாடு முழுவதும் உள்ளன.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டணத்தை, நுகர்வோர்களிடமிருந்து மின்சார வாரியம் வசூலித்து வருகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டு மின்சார கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்தது.
அமைச்சர் விளக்கம்
அதே போல் வரும் ஜூன் மாதம் மின்கட்டணத்தை 3 சதவீதம் உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், "மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்தாலும், நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தமிழக முதல்வர் முடிவு எடுப்பார்" என தெரிவித்துள்ளார்.
மின்கட்டணத்தை அதிகரிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.