மின் கட்டண உயர்வுக்கு ஜப்பான் அரசா காரணம்? - ஜெயக்குமார்
மின் கட்டண உயர்வு குறித்து திமுக செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ள கருத்துக்கு இதற்கு ஜப்பான் அரசா பொறுப்பு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை
தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரின் பிறந்த நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

இதே போல் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தந்தை பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மின் கட்டண உயர்விற்கு திமுக பொறுப்பில்லை என சொல்கின்றனர். எனில் ஜப்பான் அரசு இல்லை எனில் ஆப்கானிஸ்தான் அரசு பொறுப்பா? மின் கட்டணத்தை ஏற்றியது தமிழக அரசு.

மக்கள் அனைவரும் சிந்திக்க தெரியாதவர்கள் என நினைத்தால் இவர்களை விட அறிவாலிகள் இல்லை. மின் கட்டணம் மற்ற மாநிலத்தை விட தமிழகத்தில் குறைவு என சொல்லுவார்கள்.
அதிமுக ஆட்சியில் தான் அதிக அளவு ஏற்பட்டது எனவும் சொல்கின்றனர். மக்களுக்கு சரியாக இந்த திமுக அரசு செய்கிறதா இல்லையா என தெரியும் என கூறினார்.