ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35: அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையைச் சமாளிக்க, வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக ரூ.35-க்கு கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மின் தேவை கடந்த காலங்களில் 16,800 மெகாவாட்டாக இருந்த நிலையில், தற்போது 21,700 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.
மத்திய அரசிடமிருந்து 1,850 மெகாவாட் மின்சாரம் கிடைக்காததும், காற்றாலை மின் உற்பத்தி 500 மெகாவாட்டாகக் குறைந்துள்ளதும் மின் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன.

2 முதல் 3 மணி நேரம் வரை மின்வெட்டு
இதனால், அக்டோபர் 15 முதல் 31 வரை மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாகவும், இதற்காக நாளொன்றுக்கு கூடுதலாக ரூ.5 கோடி செலவாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தக் கொள்முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால், நாளொன்றுக்கு 2 முதல் 3 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.
இதற்கிடையே, ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் செய்யப்படுவது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விமர்சனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.