டேய் ஒரே அடி பாக்குறியா : மின் மீட்டரை தூக்கி அடித்த மின்வாரிய ஊழியர்

Viral Photos
By Irumporai Aug 12, 2022 03:35 AM GMT
Report

மின் வாரிய அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்த நபர் மீது மின்மீட்டரை தூக்கி வீசிய அதிகாரியின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மின்தடை புகார்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி தீர்த்தகிரி நகரை சேர்ந்த பெண்மனி ஒருவர் நேற்று மாலை பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்திற்க்கு வந்து தன்னுடைய வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நேரமாக மின்சாரம் வரவில்லை என புகார் அளித்தார்.

டேய் ஒரே அடி பாக்குறியா  : மின் மீட்டரை தூக்கி அடித்த மின்வாரிய ஊழியர் | Electricity Employee Threw The Electricity Meter

 மின் மீட்டரை தூக்கி அடித்த அதிகாரி

அப்போது பணி உதவி மின்பொறியாளர் இல்லாததா காரணத்தால் வணிகவிற்பனையாளர் குப்புராஜ் சரி செய்து தருவதாக பெண்மணியிடம் கூறிவிட்டு அலுவலகம் உள்ளே சென்று அமர்ந்தார். அப்போது பெண்மணியின் உடன் வந்தவர்கள் குப்புராஜை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த குப்புராஜ் மின் மீட்டரை அவர்கள் மீது கோபத்துடன் வீசினார். இதனை செல்போனில் படம் பிடித்தவர்கள் சமூக வலைதளங்களில் பரவ விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே மின்மீட்டரை தூக்கியடித்த மின்வாரிய ஊழியர் குப்புராஜ் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக பாலக்கோடு உதவி செயற்பொறியாளர் வனித்தா தெரிவித்துள்ளார்.