தடுப்பூசி செலுத்தாத மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது - மின்வாரியம் அறிவிப்பு
மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வரும் 7ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உத்தரவு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அலுவலர்கள், பணியாளர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என்று மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
தற்போது பொதுமக்கள் எளிதாக தடுப்பூசி பெறும் வகையில், தமிழக அரசு சார்பாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், அரசின் முயற்சிக்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.
விரைவில் தமிழக முழுவதும் 100% தடுப்பூசி செலுத்துவதையே தமிழக அரசு குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் , மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வரும் 7ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உத்தரவு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அலுவலர்கள், பணியாளர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என்று மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.