முதியவர் கெஞ்சி கேட்டும் ரயிலில் ஏற்ற மறுத்த ஊழியர் - தவழ்ந்து சென்ற பரிதாபம்!
பழனி கோவிலில் ஒரு பெரியவர் மலையிலிருந்து தவழ்ந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மின் இழுவை ரயில்
பழனி கோவிலில் சிறுவர்கள், வயதான முதியவர்கள் எளிதாகவும், விரைவாகவும் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல மின்இழுவை ரயில் மற்றும் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கிருஷ்ணகிரியை சேர்ந்த வயதான பக்தர் ஒருவர் பழனிகோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தார்.
அங்கு தரிசனம் செய்துவிட்டு கீழே வருவதற்காக அவர் மின் இழுவை ரயிலில் ஏற முயன்றுள்ளார். அப்பொழுது அங்கிருந்த ஊழியர் அவரை ஏற்ற மறுத்துள்ளார்.
முதியவர்
இந்நிலையில், அந்த முதியவர் படிப்பாதையில் தனது 2 கைகளை ஊன்றியபடியே தவழ்ந்து இறங்கி வந்தார். அப்பொழுது அங்கிருந்த பக்தர்கள் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
இதனால் பலர் பழனி கோவிலுக்கு வரும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்காகத்தான் மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகியவை இயக்கப்படுகிறது. பணம் படைத்தவர்கள் மற்றும் வி.ஐ.பிகளுக்கு மட்டுமே ரோப்கார் உள்ளதா என்ற கேள்வி பக்தர்களிடையே எழுந்துள்ளது.
மேலும், முதியவரை மின்இழுவை ரெயிலில் ஏற்ற மறுத்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.