சென்னையில் தடம் புரண்ட மின்சார ரயில் : பயணிகளுக்கு பாதிப்பா ?
சென்னையில் இன்று மின்சார ரயில் தடம் புரண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடம் புரண்ட ரயில்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளுவர் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயிலின் ஒரு பேட்டி பேசின்பிரிட்ஜ் அருகே திடீர் என தடம் புரண்டது.
பயணிகளுக்கு பாதிப்பு இல்லை
உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு தடம் புரண்ட ரயில் பெட்டியை சரி செய்யும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தடம்புரண்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த ரயில்வே போலீசார் உத்தரவிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தை அடுத்து சென்னையில் ரயில் தடம் புரண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan