தீப்பிடித்து எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - வைரலாகும் வீடியோ
ஹைதராபாத்தில் தீப்பிடித்து எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வீடியோ பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இணையத்திலும் வைரலாகி வருகிறது.
ஹைதராபாத்தின் முக்கிய சாலை ஒன்றில் 2 நாட்களுக்கு முன்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையேற்றத்தால் நாட்டில் எலெக்ட்ரிக் வாகன சந்தை சமீப மாதங்களாக ஏற்றம் கண்டு வருகிறது. இதுதொடர்பாக பொதுமக்களிடையே பல்வேறு குழப்பங்கள் இருந்தாலும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை பற்றி தெரிந்து கொள்வதிலும், வாங்குவதிலும் அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனிடையே எலெக்ட்ரானிக் கேஜெட்ஸ்கள் தீப்பிடித்து எரிவதைப் போன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எறிந்துள்ள சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 1.51 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடிப்பதற்கு முன்பு புகையை கக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்ததற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் பேட்டரியில் பழுது ஏற்பட்டிருந்தால் கூட இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் எலெக்ட்ரிக் வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம் பற்றிய பயத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Buy a E Scooter and suffer pic.twitter.com/OGX6CxMmMb
— Patrao (@in_patrao) September 29, 2021