கையிருப்பில் நிலக்கரி உள்ளது மின் தட்டுப்பாடு வராது - மின்சாரத்துறை அமைச்சர்

minister byte Raj Kumar Singh
By Anupriyamkumaresan Oct 10, 2021 10:51 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சமூகம்
Report

நாடு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களில் போதிய நிலக்கரி கையிருப்பில் உள்ளதால் மின் தட்டுப்பாடு வராது என டெல்லியில் நடந்த ஆலோசனைக்கு பின்னர் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் பேட்டியளித்திருக்கிறார்.

டெல்லியில் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை பற்றி மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசித்தபின் அமைச்சர் ஆர்.கே.சிங் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது," நாடு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களில் போதிய நிலக்கரி கையிருப்பில் உள்ளதால் மின் தட்டுப்பாடு வராது. 4 நாட்களுக்கு கையிருப்பு உள்ள நிலையில் தினமும் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி நிரப்பப்படுகிறது.

கையிருப்பில் நிலக்கரி உள்ளது மின் தட்டுப்பாடு வராது - மின்சாரத்துறை அமைச்சர் | Electric Department Minister Gives Hope For People

மின் உற்பத்தி நிலையங்களுக்கு தொடர்ந்து நிலக்கரி அனுப்புவதாக கெய்ல் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. நிலக்கரி பற்றாக்குறை என்பது இதுவரை இல்லை; இனியும் இருக்காது. மேலும் நிலக்கரி இருப்பு தொடர்பாக நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியுடன் தொடர்ந்து பேசிவருகிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.