தச்சூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
தச்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி நகராட்சி மற்றும் சங்கராபுரம் பேரூராட்சி பகுதிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையம் கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.
இதைத் தொடர்ந்து மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்வின்போது கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன் கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலஷ்மி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.