ஈபிஎஸ்-க்கா, ஓபிஎஸ்-க்கா? - இன்று டெல்லி செல்லும் அண்ணாமலை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்தமாதம் 27 -ம் தேதி நடைபெற உள்ளது, இடைத்தேர்தல் நெருங்கி வருவதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல்
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் பாஜகவுடனான கூட்டணி யாருக்கு என இன்னும் முடிவாகாததால் வேட்பாளர் அறிவிப்பு காலதாமதம் ஆனது.
அண்ணாமலை டெல்லி பயணம்
ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் போட்டியிட ஈபிஎஸ் தரப்பு அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்த பா.ஜ.க தலைவர் அண்ணாமாலை இன்று இரவு டெல்லி செல்கிறார்.
டெல்லியல் மூத்த தலைவர்களை அவர் சந்தித்த பின் இடைத்தேர்தல் தனித்து போட்டியா அல்லது ஆதரவு ஈபிஎஸ்-க்கா, ஓபிஎஸ்-க்கா என்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகின்றது.