மக்களவை தேர்தல் 2024 - மதிமுக, விசிகவுக்கு சின்னம் ஒதுக்கீடு!

Marumalarchi Dravida Munnetra Kazhagam Thol. Thirumavalavan Vaiko Tamil nadu Lok Sabha Election 2024
By Jiyath Mar 30, 2024 11:59 AM GMT
Report

மக்களவை தேர்தலில் போட்டியிடும் மதிமுக மற்றும் விசிக கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல்

2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது.

மக்களவை தேர்தல் 2024 - மதிமுக, விசிகவுக்கு சின்னம் ஒதுக்கீடு! | Elections Allotment Of Symbols For Mdmk Vsk

இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழக தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

சின்னம் ஒதுக்கீடு

அதன்படி சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் மற்றும் விழுப்புரம் 2 தொகுதிகளிலும் அக்கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் 2024 - மதிமுக, விசிகவுக்கு சின்னம் ஒதுக்கீடு! | Elections Allotment Of Symbols For Mdmk Vsk

அதேபோல் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் துரை வைகோ திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.