ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் : விசிக தேர்தல் பணிக்குழு நியமனம்
ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தலில் பணியாற்ற விசிக சார்பில் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விசிக தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களை ஆதரித்து தேர்தல் பணிகளைச் செய்வதற்கென பின்வருமாறு பணிக்குழு நியமிக்கப்படுகிறது.
மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் பிற முன்னணி தோழர்கள் இக்குழுவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
விசிக தேர்தல் பணிக்குழு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு நியமன பட்டியலில் பாவரசு, கனியமுதன், கிட்டு , ஆல்டரின் , அம்பேத்கர், அக்பர் அலி, அகரமுதல்வன், உஞ்சை அரசன், சிபிச்சந்தர் , சாதிக், சிறுத்தை வள்ளுவன், அரசாங்கம், பைசல் அகமது , அம்ஜத் கான் உள்ளிட்ட 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.