தமிழக மக்களை இரண்டாம் தர மக்களாக பிரதமர் கருதுகிறார் - ராகுல் காந்தி!
3 நாள் தேர்தல் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள ராகுல்காந்தி கோவையில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் கோவை களப்பட்டி பகுதியில் கே.எஸ் அழகிரியுடன் இணைந்து பரப்புரையை தொடங்கி பேசிய ராகுல்காந்தி,தமிழகத்தில் தனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் தமிழகம் வருவது தனக்கு எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசு ,ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே மாதிரியான செயல்பாடுகளை கொண்டுவர முயற்சி செய்துவருவதாக கூறிய ராகுல் காந்தி, அந்த முயற்சியை எதிர்த்து நாம் போராட வேண்டியுள்ளது என கூறினார்.
மேலும்,தமிழக கலாசாரத்தை மோடி ஏற்கவில்லை எனவும், தமிழக மக்களை 2ஆம் நிலை குடிமக்களாகத்தான் அவர் கருதுகிறார்.