தமிழகத்தில் தேர்தலை முடிவு செய்ய பிப். 20, 21ம் தேதி தேர்தல் ஆணைய கூட்டம் நடத்த திட்டம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப்ரவரி 20ம் தேதி, 21ம் தேதி தேர்தல் ஆணைய கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்துவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆலோசனை நடத்தினார். அதில் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்களை எப்போது நடத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இம்முறை தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கொரோனா பரவல் இருக்கும் நிலையில்பிப்ரவரி கடைசி வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் மே 5ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.