நெருங்கும் தேர்தல்: தமிழகம் வரும் துணை ராணுவப்படை

india tamil Parliament
By Jon Feb 20, 2021 06:06 AM GMT
Report

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தலை எதிர்நோக்கி மக்களும் ஆர்வத்துடன் காத்துக் கிடக்கின்றனர். தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள், வாக்கு இயந்திரங்கள், வாக்கு எண்ணப்படும் இடங்கள் எல்லாம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இரண்டு கட்டமாக தமிழகம் வந்த இந்திய தேர்தல் ஆணையக் குழு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி விட்டுச் சென்றிருக்கிறது.

அதன் படி, இம்மாத இறுதிக்குள் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளையும் நடத்த வேண்டும் என்பதால், தேர்தல் எந்த மாதம் நடத்தப்படும் என்பது நிர்ணயிக்கப்படுமெனவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிப்ரவரி 25 ஆம் தேதி துணை ராணுவப்படை தமிழகம் வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக மத்திய ஆயுதப்படை 45 கம்பெனியின் போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகம் வருகிறார்கள்.