மதுரையில் தேர்தல் விதி மீறல்..முன்னாள் தலைவர்களின் சிலைகள் திறப்பு

people election decision making
By Praveen Apr 20, 2021 07:00 PM GMT
Report

மதுரையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி முன்னாள் தமிழக முதல்வர்களின் சிலை திறக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டமன்றத் பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதற்கு முன்பு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்ததை அடுத்து அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி மாநகராட்சி ஊழியர்கள் துணியால் மூடப்பட்டு உள்ளது.

அதன்படி மதுரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் சிலைகள் துணி கொண்டு வரும் மே 2 ஆம் தேதி வரையில் மூடப்பட்டிருக்கும் என்ற தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் சிலையை மறைத்திருந்த துணியை அகற்றியும் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் உள்ளது. இதேபோல் மதுரை யானைக்கல் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்ததோடு அதன் அருகாமையில் திமுக கொடியும் வைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து மதுரை கேகே நகர் சந்திப்பில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர்களின் சிலையும், தமுக்க மைதானம் பகுதியில் உள்ள நேரு சிலையும் தற்போது வரையில் துணியால் மூடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.