தேர்தல் வந்தவுடன் ஸ்டாலினுக்கு எம்ஜிஆர் பெரியப்பா சித்தப்பாவா?- அமைச்சர் செல்லூர் ராஜூ விளாசல்

political prime minister tamilnadu
By Jon Feb 02, 2021 12:06 PM GMT
Report

 தேர்தல் நெருங்குவதால் பெரியப்பா சித்தப்பா என ஸ்டாலின் எம்ஜிஆரை கூறு போடுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை கோவில்பாப்பாகுடி பகுதியில் 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, தேர்தல் நெருங்குவதால் பெரியப்பா சித்தப்பா என ஸ்டாலின் எம்ஜிஆரை கூறு போடுவதாக தெரிவித்தார். மேலும், பெரியப்பா எம்ஜிஆர் தான் அரசியலில் பணியாற்ற அறிவுறுத்தியதாக ஸ்டாலின் கூறுகிறார்.

முரசொலியில் எம்ஜியாரை இழிவாக வாங்காத கப்பலை வாங்கியதாக எழுதியவர்கள் திமுகவினர். எம்ஜிஆரை திமுக தலைவர் கலைஞர் இழிவாக பேசிய போது அவர் சித்தப்பா என தெரிய வில்லையா? அவரை கட்சியை விட்டு நீக்கும் போது கலைஞரிடம் சித்தப்பாவை நீக்காதீர்கள் எனக் கூறி ஸ்டாலின் அடம் பிடித்திருக்கலாமே?

எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது அதையெல்லாம் செய்யாமல் தேர்தல் நேரத்தில் பெரியப்பா, சித்தப்பா எனக்கூறுகிறார். தற்போது எம்ஜியாரை பெரியப்பா, சித்தப்பா என ஸ்டாலின் கூறினாலும் முதல்வர் எடப்பாடி தான் முதல்வர் என மக்கள் தீர்மானம் செய்துவிட்டதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.