மேடையில் திடீரென மயங்கி விழுந்த முதல்வரால் பரபரப்பு
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி வதோதரா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். குஜராத் முதல்வர் விஜய் ரூபானி வதோதரா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த நிகழ்ச்சி மேடையில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது முதல்வர் திடீரென மயங்கி விழுந்தார். அப்போது இதனை கவனித்துக் கொண்டிருந்த பாதுகாவலர் விரைந்து வந்து அவரை தாங்கி பிடித்தார். இதனையடுத்து, மேடையிலேயே முதல்வருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டது. பிறகு குஜராத் முதல்வரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து பாரத் டேஞ்சர் பேசுகையில், 'கடந்த 2 நாட்களாகவே முதல்வருக்கு உடல்நிலை சரியாக இல்லை. இதனால் அவர் பொது கூட்டங்களை ரத்து செய்யாமல் கலந்து கொண்டு வந்தார். தற்போது அவர் உடல் நலத்துடன் இருக்கிறார் என்றார்.