தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன

india people election vote
By Jon Mar 02, 2021 02:15 PM GMT
Report

தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அதன்படி கட்டட உரிமையாளரின் அனுமதியின்றி பதாகைகளைத் தொங்க விடுவது, அரசியல் கட்சி வாசகங்களை எழுதுவது, கட்சிக் கொடியைப் பறக்க விடுவது ஆகியவற்றில் அரசியல் கட்சிகள் ஈடுபடக்கூடாது.

ஒரு கட்சியினர் ஒட்டிய பரப்புரை அறிக்கைகளை மற்றும் விளம்பரங்களை இன்னொரு கட்சியினர் அகற்ற அல்லது கிழிக்கக் கூடாது. கட்சி அல்லது வேட்பாளர் சார்பில் பொதுக்கூட்டம் நடக்க உள்ள இடம், நேரம் ஆகியவற்றை காவல்துறையிடம் முன்னரே தெரிவிக்க வேண்டும்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசின் விளம்பர பதாகைகள்,அரசியல் தலைவர்கள் படங்கள் ஆகியவற்றை மறைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.