வாக்கு எண்ணிக்கை;மேஜைகளில் மாற்றமில்லை: தேர்தல் ஆணையர்

election result sathiya pratha sagu
By Irumporai Apr 23, 2021 09:03 AM GMT
Report

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

அங்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா பரவல் அதிகரித்தாலும் திட்டமிட்டபடி மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு,.

வாக்கு எண்ணும் மேஜைகளின் எண்ணிக்கையில் மாற்றமில்லை, 14 மேஜைகளில் தான் வாக்கு எண்ணிக்கை உறுதி என செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

அதே சமயம், மே 2ம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் எனவும், அதில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமென சில மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்ட  சத்ய பிரதா சாஹு. 

வாக்கு எண்ணிக்கை;மேஜைகளில் மாற்றமில்லை: தேர்தல் ஆணையர் | Election Result Tamilnadu Result

அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

ஆகவே, ஒட்டுமொத்தமாக கொரனா பரிசோதனை செய்யலாமா என்பது ஆலோசனை நடைபெற்று வருவதாகவும்.

விரைவில் சுகாதாரத் துறை அதற்கான சுற்றறிக்கையை அனுப்பும் என தெரிவித்துள்ளார்.