தேர்தலில் நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால் ராதிகா வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார்-சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்

election parliament tamilnadu
By Jon Jan 30, 2021 11:52 AM GMT
Report

தேர்தலில் நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், ராதிகா சரத்குமார் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார். என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அதன் மகளிர் அணிச் செயலாளர் ராதிகா சரத்குமார் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர். கூட்ட முடிவில் செய்தியாளர்களை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறுகையில், ஒவ்வொரு கட்சியும் தனித்துப் போட்டியிட்டு, வெற்றி விகித்தாச்சார அடிப்படையில் ஆட்சி அமைக்கலாம் என யோசனை தெரிவித்தவன் நான்.

ஆதலால் கூட்டணி அமைத்து தேர்தல் களம் காணும் போது, மூன்றாவது கூட்டணி அமைந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் தயார்தான். தேர்தலில் நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், எங்களது மகளிர் அணிச் செயலாளர் ராதிகா சரத்குமார் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார்.

கடந்த ஆண்டு கொரோனா மக்களின் பொருளாதார சூழ்நிலையைப் பாதித்து இருக்கிறது. ஆகவே நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதிலும் வல்லவரை தேர்ந்து எடுக்க வேண்டும் என கூறினார். அதே சமயம்,திமுக தலைவர் நேரில் கண்டாலே பேச மாட்டார்.

ஆதலால் திமுக கூட்டணிப் பற்றிய சிந்தனை எங்களுக்கு இல்லை .சசிகலா வந்து அவரது நிலைப்பாட்டை தெரிவிக்கட்டும். அவர் குறித்து பின்னர் பார்க்கலாம்எனப் பேட்டி அளித்தார். இந்த கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.