புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
நவம்பர் 2ம் தேதி நடைபெறும் புதுச்சேரி முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்க இருக்கிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலானது நவம்பர் 2, 7 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடக்க இருக்கிறது.
ஏற்கெனவே உள்ளாட்சி தேர்தலுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்றம் தேர்தலை நிறுத்தியதால் புதிய அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து, நவம்பர் 2ம் தேதி நடைபெறும் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்க இருக்கிறது. மேலும், நவம்பர் 7ம் தேதி நடைபெறும் 2ம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அக்டோபர் 16ம் தேதியும், நவம்பர் 13ம் தேதி நடைபெறும். 3ம் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அக்டோபர் 22-ம் தேதியும் தொடங்க இருக்கிறது.
