கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் எதிரிகள் இல்லை : விசிக தலைவர் திருமாவளவன்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கண்ணனு எட்டிய தூரம் வரையில் எதிரிகளே இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவி கே எஸ் இளங்கோவன் திமுக தலைவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு சேகரித்தார். இந்த நிலையில்,விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார், அப்போது செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்
எதிரிகளே இல்லை
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வெற்றி உறுதி செயப்பட்டது. ஈரோடு பெரியார் மண் . பெரியார் வாரிசாக இளங்கோவன் களமிறங்குகிறார். உறுதிப்படுத்தும் விதமாக இந்த வெற்றி அமையும். அதிமுகவை பொறுத்தவரையில் பாஜக தோளில் ஏறி நிற்கிறார்கள். கண்ணனு எட்டிய தூரம் வரையில் எதிரிகளே இல்லை .நானும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளேன் என கூறினார்.