இதெல்லாம் டைம் வேஸ்ட் .. ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் இல்லை : பாமக அறிவிப்பு

Dr. S. Ramadoss PMK
By Irumporai Jan 21, 2023 07:07 AM GMT
Report

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடவுமில்லை யாருக்கும் ஆதரவுமில்லை என பாமக தலைமை அறிவித்துள்ளது.

ஈரோடு இடைத்தேர்தல்

வரும் பிபர்வரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் போட்டியிடவுமில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், இடைத்தேர்தல்கள் தேவையற்றவை; மக்களின் வரிப் பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை.

இதெல்லாம் டைம் வேஸ்ட் .. ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் இல்லை : பாமக அறிவிப்பு | Election No Contest No Support Anbumani Ramadoss

 போட்டியுமில்லை ஆதரவுமில்லை :

பொதுத்தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றதோ அதே கட்சியினை சேர்ந்த ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக்கிவிடலாம் இதுதான் பாமகவின் நிலைப்பாடு எனக் கூறினார். இன்று மாலை பாமக தலைவர்கள் சந்தித்து ஓபிஎஸ் தரப்பினர் ஆதரவு கேட்க இருந்த நிலையில் யாருக்கும் ஆதரவில்லை என்பதை தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.