முதல்வரை வரவேற்கும் கூட்டத்தில் துப்பாக்கியுடன் உலா வந்த நபரால் பரபரப்பு

kanimozhi dhinakaran palanisamy
By Jon Feb 11, 2021 12:52 PM GMT
Report

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரச்சாரத்திற்காக வருகை தர இருந்த கூட்டத்தில் துப்பாக்கியுடன் நின்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி 'வெற்றி நடைபோடுகிறது தமிழகம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில் 5-ம் கட்டமாக இன்று காலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். இந்நிலையில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் முதலமைச்சரை வரவேற்க காத்திருந்த கூட்டத்தில் துப்பாக்கியுடன் நின்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் நின்ற மர்மநபரை போலீசார் பிடித்தனர்.

இதனைத்தொடர்ந்து மர்ம நபரை பேரணாம்பட்டு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.