தேர்தல் மன்னன் பத்மராஜன் மீண்டும் 253வது முறையாக வேட்புமனு தாக்கல்

Salem
By Yashini Mar 31, 2026 12:41 PM GMT
Report

சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் தேர்தல் மன்னன் டாக்டர் பத்மராஜன்.

இவர் முதல் நாளிலேயே வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பத்மராஜன், தனது 253வது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

காலை 11 மணிக்கு, தேர்தல் அலுவலர் சுகுமாரிடம் மனுவை அளித்து, உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்.

தேர்தல் மன்னன் பத்மராஜன் மீண்டும் 253வது முறையாக வேட்புமனு தாக்கல் | Election King Sets Record Defeat

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வெற்றி மட்டுமே சாதனை அல்ல, தோல்வியிலும் சாதனை படைக்கலாம் என்பதற்காக தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன்" என்றார்.

மேலும், 1988ஆம் ஆண்டு முதல் முறையாகவே வேட்புமனு தாக்கல் செய்ததாக கூறினார்.

பல மாநிலங்களிலும், முன்னாள் முதல்வர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளிலும் போட்டியிட்டதாகவும் தெரிவித்தார்.

2011 மேட்டூர் தேர்தலில் அதிகபட்சமாக 6,273 வாக்குகள் பெற்றதாக கூறினார்.

மேலும், அதிக தோல்விகளை சந்தித்த வேட்பாளர் என்ற சாதனையுடன் லிம்கா மற்றும் கின்னஸ் சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளதாக அவர் கூறினார்.