தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை!
தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தவெக தலைவரும் நடிகருமான விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார்.
அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து இன்று 10 ஆம் திகதி காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தேவர் சிலை முன்பு மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை பிரசாரம் செய்ய உள்ளார்.

இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து விஜய் மேலூர், திருப்பத்தூர்.அங்கிருந்து விஜய் மேலூர், திருப்பத்தூர் வழியாக காரைக்குடிக்கு தனது பிரசார வாகனத்தில் பணயத்தை ஆரம்பித்தார்.
இந்த நிலையில், காரைக்குடி செல்லும் வழியில் திருப்பத்தூர் அருகே எஸ்.எஸ்.கோட்டை பகுதியில் தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.
பறக்கும் படையினரின் சோதனைக்கு விஜய் முழு ஒத்துழைப்பு வழங்யர்துடன், இதனைத்தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்ட சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் இல்லாததால் அவரது காரை அங்கிருந்து செல்ல அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.