இனி நான் வாழும் ஒவ்வொரு நொடியும் மக்களுக்காகவே - கமல்ஹாசன்
people
kamal
party
tamilnadu
mnm
By Jon
முழு நேர அரசியல்வாதி என யாரும் கிடையாது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திக் குமாரை ஆதரித்து கமல் பரப்புரை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார். ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்களிக்கும் கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட கமல், தன் எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காகவே என்று கூறினார்.