தேர்தல் எதிரொலி: அஸ்ஸாமில் பெட்ரோல் விலையை குறைத்த பாஜக அரசு
இந்தியாவில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. பல இடங்களில் பெட்ரோல் விலை ரூ.90 ஐ கடந்துள்ளது. தொடர்ந்து விலை ஏறி வருவதால் விரைவில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தொடக்கூடும் எனப் பலரும் கணித்து வருகின்றனர். அதே சமயம் தமிழ்நாடு, அஸ்ஸாம், மேற்கு வங்கம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு வருகின்ற மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதனிடையே அஸ்ஸாம் மாநிலத்தில் பெட்ரோல் விலை ரூ.5 குறைக்கப்படுவதாக பாஜக அரசு அறிவித்துள்ளது. எனவே பெட்ரோல் ரூ.85ற்கு விற்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை மனதில் வைத்து பாஜக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
ஏற்கனவே மத்திய அரசு பெட்ரோல் மீது விதித்து வரும் அதிக அளவிலான வரியை குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை இருந்து வருகிறது.