3 மாநில சட்டமன்ற தேர்தல் - இன்று வெளியாகிறது தேர்தல் தேதி
India
By Thahir
திரிபுரா, மேகாலய உள்பட 3 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை ஆணையம் இன்று அறிவிக்கிறது.
இன்று வெளியாகிறது தேர்தல் தேதி
2023ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் மூன்று மாநிலங்கள் தேர்தலை சந்திக்க இருக்கின்றன. மேலும் இந்த மூன்று மாநிலங்களிலும் ஒன்றாகவே தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

நாகலாந்து மாநிலத்தில் சட்டசபையின் பதவி காலம் வருகிற மார்ச் 12-ந்தேதி முடிவடைகிறது மேகாலயா மாநிலத்தின் பதவிக்காலம் மார்ச் 15-ந்தேதியுடன், திரிபுரா மாநிலத்தின் பதவிக்காலம் மார்ச் 22-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் இன்று பிற்பகலில் 3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவிக்கிறார்.