தேர்தல் நடத்தை மீறல் - 24 வழக்குகள் பதிவு - காவல்துறை தகவல்!
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால், தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளதையடுத்து, அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேர்தலில் பணபட்டுவாடவை தடுக்க பல்வேறு இடங்களில் போலீசார்கள் குவிக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சில இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத பணங்கள் மற்றும் பரிசு பொருட்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் பொருள்கள் மற்றும் பண பறிமுதல் தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
9 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 1,538 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.