நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - காலை 9 மணி நிலவரப்படி 8.21% வாக்குகள் பதிவு
tnelections
electioncommissionerpressmeet
pazhanikumarpressmeet2022
By Swetha Subash
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 7 மணி முதலே தொடங்கப்பட்ட வாக்குப்பதிவில் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் செய்ய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்,
காலை 9 மணி நிலவரப்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 8.21% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் சென்னை உள்பட 21 மாநகராட்சிகளில் காலை 9 மணி நிலவரப்படி 5.78% வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும்,
பேரூராட்சிகளில் காலை 9 மணி நிலவரப்படி - 11.74% வாக்குகளும் நகராட்சிகளில் 10.32% வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.