உலகிற்கே முன்னுதாரணமாக தமிழக சட்டப்பேரவை தேர்தல்
Election
By Fathima
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக சென்னையில் 2 நாட்கள் ஆலோசனை நடத்திய நிலையில் சென்னையில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் சிறப்பான முறையில் நடைபெற்றது, மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர், அதில் பெண்கள் மட்டும் 2.87 பேர்.
75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது, இரண்டு மணிநேரத்துக்கு ஒருமுறை வாக்குபதிவு நிலவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் என தெரிவித்தார்.