தேர்தலுக்கு முன்னர் ஜனநாயகன் வெளியீடா? தலைமை தேர்தல் ஆணையர் பதில்
ஜனநாயகன் பட வெளியீடு தொடர்பான கேள்விக்கு தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பதிலளித்துள்ளார்.
ஜனநாயகன் வெளியீடு
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவான ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
விஜய் அரசியலுக்கு வந்து விட்டதால், இதுவே கடைசி படம் என அறிவித்துள்ள நிலையில், ரசிகர்கள் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்.

ஆனால் தணிக்கை வாரியம் படத்திற்கு மறுதணிக்கை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ள நிலையில், தணிக்கை சான்றிதழ் கிடைக்கததால் படம் தற்போது வரை வெளியாவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளது.
மேலும், படத்தில் அரசியல் தொடர்பான வசனங்கள் உள்ளதால் படத்தை தேர்தல் ஆணையம் ஒருமுறை பார்த்த பின்னர் ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல் வெளியானது.
தலைமை தேர்தல் ஆணையர் பதில்
இந்நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையரான அர்ச்சுனா பட்நாயக்கிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பபப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக ஜனநாயகனை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதலை பெற வேண்டுமா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், "தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, ஒரு நடிகனாக இருக்கும் வேட்பாளரின் சினிமாவை வெளியிடுவதற்கு தேர்தல் கமிஷனின் ஒப்புதலை பெற வேண்டுமா? என்று கேட்கிறீர்கள்.
இது நல்ல கேள்விதான். ஆனால் இது முதன்முறையாக நடக்கும் சம்பவம். இதுபற்றி தேர்தல் கமிஷனிடம் கேட்டு பதிலளிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.