அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை..!

By Thahir Aug 01, 2022 04:31 AM GMT
Report

தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை

வாக்காளர் பட்டியலுடன், ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் இன்று (ஆக.1-ம் தேதி) ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை..! | Election Commission Will Consult Political Parties

இதனிடையே, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி இன்றிலிருந்து (ஆகஸ்ட் 1-ம் தேதி) தொடங்குகிறது.

இந்த பணிகளை 2023 மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்கும் வகையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதற்கென '6 பி' என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையிலும்,

மாவட்டங்களில் தலைமை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமைகளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பது, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். இதற்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.