சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் : சோகத்தில் சிவசேனா
சிவசேனா கட்சியில் ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்ரே என இரு பிரிவுகளாக பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், கட்சி சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது.
முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே
சிவசேனா கட்சி தற்போது முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே என இரு பிரிவுகளாக உள்ள நிலையில் அக்கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது.
இதனால் அடுத்த மாதம் நடைபெறும் இடைத்தேர்தலில் இரு பிரிவுகளுக்கு அக்கட்சியின் சின்னமான 'வில் அம்பு' சின்னத்தை பயன்படுத்த அனுமதி இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குழப்பத்தில் சிவசேனா
இரு தரப்புக்கும் வேறு தனிச் சின்னங்கள் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் எனவும், இரு தரப்பிக்கு இடையே கட்சியின் உரிமை தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு கானும் இதே நிலை தொடரும் என தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை அநீதியானது என உத்தவ் தாக்ரே தரப்பு ஆதரவாளரும், மாநில சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவருமான அம்பாதாஸ் தவே கருத்து தெரிவித்துள்ளார்