நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரைக்கான நேரம் நீட்டிப்பு – மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பரப்புரை செய்ய அனுமதி நீட்டித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுல்ளது
தமிழகத்தில் வருகின்ற பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.இதன்காரணமாக,தேர்தல் பரப்புரை பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்2த நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பரப்புரை செய்ய அனுமதி நீட்டித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக,கொரோனா பரவல் காரணமாக காலை 8 மணிக்கு முன்னதாகவும்,இரவு 8 மணிக்கு மேல் பரப்புரை செய்யக்கூடாது என்ற உத்தரவு அமலில் இருந்தது.
தற்போது பரப்புரைக்கான நேரம் நீட்டிக்கப்பட்டு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு அரசியல் கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியையும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.