பைக் பேரணிக்கு தடை விதித்த தேர்தல் ஆணையம்

election bike commission ride
By Jon Mar 27, 2021 11:18 AM GMT
Report

ஏப்ரல் 3 முதல் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 6 வரை பைக் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு. பைக் பேரணி என்ற பெயரில் வாக்காளர்களை அச்சுறுத்துவதாக புகார் எழுந்த நிலையில், ஏப்ரல் 3ம் தேதி முதல் பைக் பேரணிக்கு தடை விதிக்கப்படுகிறது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பைக் பேரணிக்கு தடை விதித்த தேர்தல் ஆணையம் | Election Commission Bans Bike Rally

அதன்படி, ஏப்ரல் 3 முதல் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 6 வரை பைக் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நாள் மற்றும் தேர்தலுக்கு முந்தைய 3 நாளில் தமிழகத்தில் எங்கும் பைக் பேரணி நடத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.