மகிழ்ச்சியில் இபிஎஸ்..அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்..!
அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீரித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இந்திய தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி இபிஎஸ் தரப்பு அளித்த ஆவணங்களை ஏற்ற தேர்தல் ஆணையம், அதை இணையதளத்தில் பதிவேற்றியது.
ஈபிஎஸ் நியமித்த நிர்வாகிகளை அங்கீகரித்தும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது தேர்தல் ஆணையம். அதன்படி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இணையதளத்தில் பதிவேற்றம்
ஏற்கனவே, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அதிமுக தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, அதிமுகவில் இபிஎஸ் தரப்பு கடிதம் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் தற்போது, அனைவரும் பார்க்கும்படி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று, ஈபிஎஸ் நியமித்த நிர்வாகிகளை அங்கீகரித்தும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.