இந்திய குடியரத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறுகிறது : தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக் காலம் கடந்த 2017 ஆம் ஜூலை மாதம் 25 ஆம் தேதி, குடியரசுத் தலைவராக பதவி ஏற்றார்.
இவரது பதவிக்காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்காக, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று தேர்தல் ஆணையம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், குடியரசுத் தலைவர் தேர்தல் தேதியை, தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்துள்ளார்

அதன்படி குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார் , ஜூலை 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
Voting for Presidential elections to be held on 18th July, counting of votes on 21st July: Chief Election Commissioner Rajiv Kumar pic.twitter.com/bTvawdiE9I
— ANI (@ANI) June 9, 2022
நாடாளுமன்ற இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) மற்றும் மாநிலங்களின் சட்டசபை உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) அடங்கிய தேர்தல் குழு (எலக்ட்ரோல் காலேஜ்), குடியரசுத் தலைவரை தேர்வு செய்கிறது.
இந்த தேர்தலில் ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பானது நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டசபைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.