17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Government Of India India
By Nandhini Jul 28, 2022 08:07 AM GMT
Report

17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் 

இது குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் -

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆண்டுக்கு 4 முறை வாய்ப்பளிக்கப்படும். இனி 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம். 

election-commission

ஜனவரி 1 மட்டுமல்லாமல் ஏப்ரல் 1ம் தேதி, ஜூலை 1ம் தேதி, அக்டோம்பர் 1ம் தேதி ஆகிய நாட்களையும் தகுதி நாளாகக் கொண்டு ஆண்டுக்கு 4 முறை பெயர் சேர்க்கப்படும். வாக்காளர் பதிவுக்கான புதிய படிவங்கள் ஆகஸ்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

இனி ஜனவரி 1-ம் தேதி அன்று 18 வயது நிரம்புகிறவர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என காத்திருக்க வேண்டியதில்லை.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.