ஈரோடு இடைத்தேர்தல் – தேர்தல் விதிகளை மீறிய தேமுதிக நிர்வாகி மீது வழக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக மறைந்ததையடுத்து, காலியாக உள்ள அந்த தொகுதிக்கு வரும் பிப்-27 இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல்
இந்த நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி-31ஆம் தேதி தொடங்கி கடந்த 7-ஆம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து 77 வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தலில் காங்கிரஸ்,அதிமுக, தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.
விதிமுறை மீறல்
இந்த நிலையில், ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அதன்படி, தேர்தல் விதிகளை மீறியதாக தேமுதிக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலகத்திற்கு முன்பாக அனுமதியின்றி கொடிகள் கட்டப்பட்டிருந்ததை கண்டித்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.