தேர்தல் பிரச்சாரம்: ஆ.ராசா - எடப்பாடி பழனிசாமி வார்த்தைப் போர்.!
ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் வார்த்தை போர் முற்றிக் கொண்டிருக்கிறது. சில சமயங்களில் வார்த்தைகள் வரம்பு மீறியும் செல்கிறது. இருவருமே சரமாரியாக வார்த்தைகளை விட்டு வருகிறார்கள்.
அப்படியாக சமீபத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரான ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்தார். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் காணொலியில் அவர், “நேற்று வரை வெல்லமண்டியில் வேலை பார்த்துவந்த பழனிசாமி ஸ்டாலினுக்கு போட்டியென்றால் எந்த விதத்தில் நியாயம்.
ஸ்டாலின் போட்டிருக்கும் செருப்பின் விலையில் ஒரு ரூபாவோட மதிப்பு உன்ன விட அதிகம்” என்று பேசியிருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

ஆ.ராசாவின் இந்த பேச்சிற்கு தற்போது பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி மதுரை பிரச்சாரத்தில் பேசியிருக்கிறார்.
அவர் பேசுகையில், “நான் ஸ்டாலின் செருப்பின் மதிப்பை விட குறைவானவனாகவே இருந்துவிட்டு போகிறேன். ஏனெனில் நான் ஒரு விவசாயி என்று பேசியுள்ளார்.
இதனால் அரசியல் களத்தில் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருவதால் அரசியலில் பரபரப்பு, சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.