தேர்தல் யுத்தத்தில் வெல்லப் போவது யார்? 129 தொகுதிகளில் திமுக- அதிமுக நேரடி போட்டி

election dmk battle aiadmk
By Jon Mar 12, 2021 03:37 PM GMT
Report

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக- திமுக இடையே 129 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இரண்டு கட்டமாக வெளியானது. இன்று திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதனை வெளியிட்டார். மொத்தம் 173 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் திமுக, அதிமுகவுடன் 129 தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது. எடப்பாடியில் அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் சம்பத் குமார்.

கரூரில் அதிமுக சார்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை எதிர்த்து திமுக சார்பில் செந்தில் பாலாஜி. திருச்செந்தூர் அதிமுக சார்பில் ராதாகிருஷ்ணனை எதிர்த்து திமுக சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன். அம்பாசமுத்திரம் அதிமுக சார்பில் இசக்கி சுப்பையாவை எதிர்த்து திமுக சார்பில் ஆவுடையப்பன். போட்டியிடுகின்றனர்.