அதிமுக வேட்பாளர் பட்டியல் தயார்! விரைவில் வரப்போகும் அறிவிப்பு

M K Stalin Tamil nadu ADMK DMK Edappadi K. Palaniswami
By Thiru Feb 16, 2026 12:00 PM GMT
Report

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

ஆளும் கட்சியான திமுக தன்னுடைய மதசார்ப்பற்ற கூட்டணியை தக்கவைத்து வருகிறது.

தமிழ்நாட்டின் பிரதான எதிர்கட்சியான அதிமுக தன்னுடைய தலைமையிலான புதிய கூட்டணியை அமைத்துள்ளது.

அதிமுக வேட்பாளர் பட்டியல் தயார்! விரைவில் வரப்போகும் அறிவிப்பு | Election 2026 Admk Plan To Release Candidates Name

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, புதிய நீதி கட்சி, புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் இணைந்து 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளன.

கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒரு புறம் நிறைவடைந்து வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, விருப்ப மனு வழங்குதல் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ரகசியமாக அணு ஆயுத தளத்தை விரிவாக்கும் சீனா! காட்டிக்கொடுத்த படங்கள்

ரகசியமாக அணு ஆயுத தளத்தை விரிவாக்கும் சீனா! காட்டிக்கொடுத்த படங்கள்

அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள்

அதிமுக கூட்டணியில் ஏற்கனவே பல கட்சிகள் இணைந்து விட்ட நிலையில் விரைவில் மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கியமாக தேமுதிக யாருடன் கூட்டணி என்ற தகவலை இதுவரை வெளியிடாமல் உள்ளது.

அப்படி இருக்கையில், ஈஷா யோகா மையத்தில் நேற்று நடைபெற்ற சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட தேமுதிக கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித்தார்.

அதிமுக வேட்பாளர் பட்டியல் தயார்! விரைவில் வரப்போகும் அறிவிப்பு | Election 2026 Admk Plan To Release Candidates Name

இந்த சந்திப்பின் காரணமாக அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற அதிக வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்பாளர்கள் அறிவிப்பு

அதிமுக கட்சி அதன் மறைந்த பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் திகதி அவர்களின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதிமுக ஏற்கனவே சில முக்கியமான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், திமுக-விற்கு முன்னதாகவே வேட்பாளர் பட்டியலையும் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.