நடிகனை பிடித்தால் விசில் அடிக்கலாம், நாட்டை கொடுக்க முடியாது- நடிகர் பிரகாஷ் ராஜ்
திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டியை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்துகொண்டார்.
அப்போது தமிழ்நாட்டில் நடைபெற உள்ள தேர்தல் மூன்று மாடல்களுக்கான தேர்தல், அவை திராவிட மாடல், அடிமை மாடல் மற்றும் சினிமா மாடல் என்று கூறினார்.
மேலும், தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டுக்கு துரோகம் நடந்து கொண்டிருக்கிறது எனவும் இந்த அடிமை மாடல் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சிகள் வாயை மூடிக் கொண்டு நிற்கிறார்கள்.
திருப்பரங்குன்றம் விஷயத்தில் மதுரையை மணிப்பூராக மாற்ற முயற்சிக்கிறார்கள். அடுத்து இவர்கள் பழனிக்கு தான் வருவார்கள் என்று கூறினார்.

அதேபோல், தவெக தலைவர் விஜயை சினிமா மாடல் என்று விமர்சித்துள்ளார்.
ஒரே சினிமாவில் டாக்டர் ஆகலாம், என்ஜினியர் ஆகலாம், ஏன் முதலமைச்சர் கூட ஆகலாம் ஆனால், அரசியலில் அப்படியே முதலமைச்சர் ஆகிவிட முடியாது.
இத்தனை வருடங்களில் தமிழ்நாடு மக்களுக்கோ, மொழிக்கோ, தன்மானத்திற்கோ பிரச்சனை வந்தபோது அவர்களுக்காக நின்றது உண்டா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகனை பிடித்தால் விசில் அடிக்கலாம், அதற்காக நாட்டை கொடுக்க முடியாது என்று விஜய்யை விமர்சித்து பேசினார்.
மேலும், இது ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும் இடையேயான தேர்தல் என்றும் பேசினார்.