13 பில்லியனுக்கு ஏலம் போன ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு

einstein theory
By Irumporai Nov 24, 2021 11:15 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

கடந்த 1913-ம் ஆண்டு மற்றும் 1914-ம் ஆண்டின் முற்பகுதியில் ஐன்ஸ்டீன் மற்றும் மைக்கேல் பெஸ்ஸோ ஆகியோரால் இணைந்து எழுதப்பட்ட 54 பக்க சார்பியல் கோட்பாட்டு நூலின் கையெழுத்துப் பிரதி 13 மில்லியன் டாலருக்கு, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.96.77 கோடிக்கு ஏலம் போயிருக்கிறது.

பாரிஸில் உள்ள கிறிஸ்டி என்ற நிறுவனம் ஏலத்திற்கு விட்டிருந்த பிரதியை ஏராளமான நபர்கள் வாங்க ஆர்வம் காட்டினர். முன்னதாக 2.4 மில்லியன் முதல் 3.5 மில்லியன் டாலர்கள் என ஏல நிறுவனம் மதிப்பிட்டிருந்த நிலையில் தற்போது இறுதியாக 13 பில்லியனுக்கு ஏலத்தில் விற்கப்பட்டிருக்கிறது.

13 பில்லியனுக்கு ஏலம் போன  ஐன்ஸ்டீனின்  சார்பியல் கோட்பாடு | Einstein Relativity Theory Manuscript

ஐன்ஸ்டீனின் கையெழுத்து பிரதி. இதுகுறித்து பேசியிருக்கும் கிறிஸ்டி நிறுவனம்,"ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு இயற்றிய காலம் பொது சார்பியல் கோட்பாட்டின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டமாகும். கோட்பாட்டின் நூல்களை ஆவணப்படுத்த எஞ்சி இருக்கும் இரண்டு கையெழுத்துப் பிரதிகளில் இதுவும் ஒன்றாகும்" என தெரிவித்திருக்கிறது