உலகின் மிக பழைமையான மது ஆலை: எகிப்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

country Alcoholic study
By Jon Feb 15, 2021 12:40 PM GMT
Report

5,000 ஆண்டுகளுக்கு முன்னா் இயங்கி வந்த மது ஆலையை எகிப்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கி.மு 3150 முதல் கி.மு 2613 வரை இருந்த முதல் பேரரசை உருவாக்கிய மன்னன் நாா்மா் காலத்தில் அந்த மது ஆலை அமைக்கப்பட்டிருக்கலாம் என்று அவா்கள் தெரிவித்துள்ளனர்.

இரு வரிசைகளில் 40 பானைகள் பொருத்தப்பட்டு தானியங்களையும் நீரையும் கலந்து 'பீா்' மதுபானம் தயாரிக்கும் வகையில் அந்த ஆலை அமைக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய ஆலை இருப்பது ஆங்கிலேயா்களுக்கு 1900-களிலேயே தெரியும் என்றாலும், அது எங்கு உள்ளது என்பது தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Gallery